பிரதமர் வேட்பாளரை ஏற்க மேக்ரான் மறுப்பு: பிரான்ஸ் அரசியலில் குழப்பம்
பிரான்சில் இடதுசாரிக் கூட்டணி முன்னிறுத்திய பிரதமர் வேட்பாளரை ஏற்க ஜனாதிபதி மறுத்துவிட்டார்.
பிரதமர் வேட்பாளரை ஏற்க மேக்ரான் மறுப்பு
இரண்டு நாட்கள் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னரும், இடதுசாரிகள் முன்னிறுத்திய பிரதமர் வேட்பாளரை ஏற்ப பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மறுத்துவிட்டார்.
இடதுசாரிக் கூட்டணியான New Popular Front (NFP)யால் அமைக்கப்படும் அரசு, உடனடியாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு வழிவகை செய்யும் என்றும், அதனால் அரசு கவிழ்ந்துவிடும் என்றும், அதனால்தான் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் மேக்ரான் விளக்கமளித்துள்ளார்.
ஆக, இன்னமும் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படாமல், பிரான்ஸ் அரசு குழப்பத்திலேயே தொடர்கிறது.
இந்நிலையில், மீண்டும் இன்று கட்சித்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |