கிரேக்கத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்! பிரான்ஸ் துணையாக நிற்கும்..பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
கிரேக்கத்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கோர விபத்து
டெம்பே எனும் பகுதியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 26 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் 85 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும், 25 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@Reuters
தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேக்ரான் இரங்கல்
இந்நிலையில் இந்த துயர சம்பவம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், 'லாரிஸா அருகே நேற்று இரவு நடந்த சோகமான விபத்தில் பலியானவர்களின் உறவினர்களிடம் எனது எண்ணங்கள் உள்ளன. கிரேக்கர்களுக்கு துணையாக பிரான்ஸ் உள்ளது' என தெரிவித்துள்ளார்.
@EFI
@Reuters
@Reuters