ஒரு பிராந்திய வெடிப்பைத் தவிர்ப்பதற்கு..ஜோ பைடனை சந்தித்தபோது பேசிய மேக்ரான்
பிரான்சில் ஜோ பைடன் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இஸ்ரேலியப் போரை சுற்றியுள்ள பதட்டங்களைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் செயல்படும் என்று இமானுவல் மேக்ரான் தெரிவித்தார்.
ஒற்றுமையாக இருந்து வருகிறோம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டாம் உலகப்போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை குறிக்கும் விதமாக, D-Day நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய ஜோ பைடன், பிரான்ஸ் எங்கள் முதல் நட்பு நாடு. எங்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்க நீங்கள் எங்களோடு இருந்தீர்கள்.
170 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் உங்களுடன் இருந்தோம். அன்றில் இருந்து நாம் ஒற்றுமையாக இருந்து வருகிறோம் என்றார்.
மேக்ரான்
அதேபோல் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron) பேசுகையில், ''ஒரு பிராந்திய வெடிப்பைத் தவிர்ப்பதற்கு நாங்கள் ஒன்றாக முயற்சிகளை இரட்டிப்பாக்குகிறோம், குறிப்பாக லெபனானில்'' என்றார்.
இருநாட்டின் தலைவர்களும் சீனாவை சமாளிப்பது, காசா மற்றும் உக்ரைன் மோதல்கள் குறித்து விவாதித்தனர். மேலும், வர்த்தகத்தில் பதட்டங்கள் இருந்தாலும், இருவரும் உடன்பாட்டின் பகுதிகளை முன்னிலைப்படுத்த ஆர்வமாக இருந்தனர்.
அத்துடன் ஹமாஸ் போராளிக் குழுவிற்கு எதிரான இஸ்ரேலியப் போரைச் சுற்றியுள்ள பதட்டங்களைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் செயல்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து உக்ரைன்-ரஷ்யா போர், காஸாவின் நெருக்கடி, காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் விநியோக சங்கிலிகள் குறித்தும் மேக்ரான், பைடன் இருவரும் விவாதிக்க உள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செய்தியாளர்களிடம் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |