அதற்காக நாங்கள் போராட போகிறோம்: பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்
தனியார் முதலீட்டைப் பெற நாங்கள் போராடப் போகிறோம் - இமானுவல் மேக்ரான்
பிரான்சின் மிகப்பெரிய மாசுபடுத்துபவர்களிடம் அடுத்த தசாப்தத்தில் பசுமை இல்ல வாயு உமிழ்வை பாதியாக குறைக்க வேண்டும் என மேக்ரான் கூறினார்
ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உரையாற்றினார்.
ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான மாநாடு எகிப்தில் கடந்த 6ஆம் திகதி தொடங்கியது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
பிரான்சின் மிகவும் மாசுபடுத்தும் 50 தொழில்துறை தளங்களை இயக்கும் நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் உரையாற்றிய மேக்ரான், அவர்கள் மட்டும் இந்த ஆலைகளில் தங்கள் உமிழ்வைக் குறைத்தால், நாட்டின் பசுமை இல்ல வாயு உற்பத்தியில் 5 சதவீதம் குறையும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பிரான்சின் மிகப்பெரிய மாசுபடுத்துபவர்களிடம் அடுத்த தசாப்தத்தில் பசுமை இல்ல வாயு உமிழ்வை பாதியாக குறைக்க வேண்டும் என்று கூறினார்.
அத்துடன், 'இதனுடன் அதிக பொது மற்றும் தனியார் முதலீட்டைப் பெற நாங்கள் போராடப் போகிறோம். நிர்வாகிகள் 18 மாதங்களுக்குள் உமிழ்வைக் குறைக்கும் திட்டங்களை முன் வைத்தால், Decarbonise தொழிலுக்கு உதவுவதற்காக இதுவரை பட்ஜெட் செய்யப்பட்ட 5 பில்லியன் யூரோக்களை அரசாங்கம் இரட்டிப்பாகும்' என மேக்ரான் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
Mohammed Badra/Pool via REUTERS
உத்தியோகபூர்வ தரவுகளின்படி தொழில்துறையானது பிரான்சில் வெறும் 10 சதவீத வேலைகளை மட்டுமே கொண்டுள்ளது, ஆனால் தேசிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 20 சதவீதம் ஆகும்.
50 அசுத்தமான தொழில்துறை தளங்கள் அந்த உமிழ்வுகளில் பாதியைக் கொண்டுள்ளன, இது பிரான்சில் சுமார் 4 மில்லியன் மக்களின் வெளியேற்றத்திற்கு சமம்.
Daniel Cole, AP