இன்று இருக்கும் நம் ராணுவம் நாளை..மேக்ரான் வெளியிட்ட பதிவு
எங்களை பாதுகாக்கும் உங்கள் மீது தேசத்தின் அங்கீகாரமும், நம்பிக்கையும் உள்ளது என ராணுவத்திடம் ஜனாதிபதி மேக்ரான் கூறியுள்ளார்.
ராணுவ வீரர்களை சந்தித்த மேக்ரான்
தென்மேற்கு பிரான்சில் உள்ள Mont-de-Marsan விமான தளத்தில் ராணுவ வீரர்களை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சந்தித்தார். பிரான்ஸ் வரும் ஆண்டுகளில் ராணுவ செலவினங்களை மூன்றில் ஒரு பங்காக உயர்த்தும் என்று அவர் கூறினார்.
மேலும், இந்த நூற்றாண்டின் பெரும் ஆபத்துகளை சமாளிக்க பிரெஞ்சு ராணுவத்தை மாற்றுவதற்கான திட்டங்களை வெளியிட்ட மேக்ரான், திட்டமிடப்பட்ட 2024-2030 வரவு செலவுத் திட்டம் ராணுவத்தை உயர்-தீவிர மோதல்களின் சாத்தியக்கூறுக்கு மாற்றியமைக்கும் என்றும் கூறினார்.
@Getty Images
அத்துடன் ட்ரோன்கள் மற்றும் ராணுவ உளவுத்துறையில் பிரான்ஸ் பெருமளவில் முதலீடு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேக்ரானின் பதிவு
இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மேக்ரான் வெளியிட்டுள்ள பதிவில், 'இன்று இருப்பதைப் போல் இல்லாத ஒரு ராணுவம் நாளை நம்மிடம் இருக்கும். எங்களை பாதுகாக்கும் உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் மரியாதையுடன், தேசத்தின் அங்கீகாரமும், நம்பிக்கையும் உள்ளது' என தெரிவித்துள்ளார்.
@@EmmanuelMacron(Twitter)