நைஜர் நாடு தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் முக்கிய முடிவு: கொண்டாடும் எதிரணியினர்
நைஜர் நாட்டிலிருந்து, அந்நாட்டுக்கான பிரான்ஸ் தூதரை திருப்பி அழைத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
என்ன பிரச்சினை?
ஜூலை மாதம் 26ஆம் திகதி, நைஜர் நாட்டின் ஆட்சியை அந்நாட்டின் ராணுவம் கைப்பற்றியது. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த Mohamed Bazoum கைது செய்யப்பட்டு, அவரும் அவரது குடும்பத்தினரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
நைஜர் நாட்டின் Sahel என்னும் பகுதியில் இஸ்லாமிய போராளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பிரான்ஸ் ராணுவ வீரர்கள் சுமார் 1,500 பேர் நைஜர் நாட்டின் தலைநகரமான Niameyக்கு அருகே முகாமிட்டுள்ளனர்.
REUTERS
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நைஜர் தலைநகர் Niameyக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் ராணுவ தளம் முன்பு, ஆட்சிக் கவிழ்ப்பு ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கிடையில், நைஜர் நாட்டுக்கான பிரான்ஸ் தூதர் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிட்டிருந்தது அந்நாட்டு ராணுவம். ஆனால், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நைஜருக்கான பிரான்ஸ் தூதரான Sylvain Itte, நைஜர் தலைநகரில்தான் இருப்பார், வெளியேறமாட்டார் என்று கூறிyஇருந்தார்.
பின்னர், பிரான்ஸ் தூதரும், தூதரக அதிகாரிகளும் நைஜர் நாட்டில் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்திருந்தார்.
பிரான்ஸ் தூதரை திருப்பி அழைத்துக்கொள்ள முடிவு
இந்நிலையில், சில மணி நேரத்திற்குள் நைஜர் நாட்டுக்கான பிரான்ஸ் தூதரான Sylvain Itteவை திருப்பி அழைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
அவருடன், தூதரக அதிகாரிகள் பலரும் பிரான்ஸ் திரும்ப உள்ளதாக மேக்ரான் தெரிவித்துள்ளார். மேலும், நைஜர் நாட்டுக்கான பிரான்சின் ராணுவ ஒத்துழைப்பு முடிந்தது என்றும், வரும் மாதங்களில் பிரான்ஸ் ராணுவமும் நைஜர் நாட்டை விட்டு வெளியேற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள நைஜர் ராணுவம், இன்று நாம் நைஜர் நாட்டின் இறையாண்மை நோக்கி எடுத்துவைக்கப்பட்டுள்ள புதிய அடியை கொண்டாடுகிறோம் என நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |