அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தல்... பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்
ஐரோப்பாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் அதிகரித்து வருவதாகவும், அதனால் அனைத்து நாடுகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
தொடர் தாக்குதல்கள்
பிரான்சில் ஒரு ஆசிரியரையும், பெல்ஜியத்தில் இரண்டு ஸ்வீடன் நாட்டு கால்பந்து ரசிகர்களையும் இஸ்லாமியவாதிகள் கொன்றதை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தன்னை ஐ எஸ் அமைப்பின் உறுப்பினராக அடையாளப்படுத்திக்கொண்ட 45 வயதான தாக்குதல்தாரி ஒருவர், பிரஸ்ஸல்ஸில் இரண்டு ஸ்வீடன் நாட்டு கால்பந்து ரசிகர்களைக் கொன்ற விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
Hindustan Times
அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தல்...
பிரான்சில், அக்டோபர் 13ஆம் திகதி, Arras என்னுமிடத்தில் தன்னை ஐ எஸ் அமைப்பின் உறுப்பினராக அடையாளப்படுத்திக்கொண்ட 20 வயது இளைஞர் ஒருவர் பள்ளி ஆசிரியர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்றதுடன், மேலும் மூவரைக் காயப்படுத்தினார்.
நேற்று மீண்டும் பெல்ஜியத்தில் இஸ்லாமியவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதைக் கண்டுள்ளோம் என்று கூறிய மேக்ரான், இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குகிறது. அதனால் அனைத்து நாடுகளுமே அபாயத்தில் உள்ளன என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலிலும் இஸ்லாமியவாத அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தி 1,300 பேரைக் கொன்றுள்ள நிலையில், வரும் நாட்கள் அல்லது வாரங்களில் தான் இஸ்ரேல் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார் மேக்ரான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |