பிரான்ஸ் குடிமக்களை மீட்க எதையும் செய்யத் தயார்: பிரான்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ள நேரத்தில் வெளியாகியுள்ள துயர செய்தி
ஹமாஸ் ஆயுதக்குழுவிடம் பிணைக்கைதிகளாக இருக்கும் பிரான்ஸ் குடிமக்களை மீட்க எதையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
காணாமல் போயுள்ள பிரான்ஸ் நாட்டவர்கள்
சர்வதேச அளவில் காணப்படும் பிரிவினைகளுடன், தேசிய அளவில் நாம் பிரிவினையைக் கூட்டி, எந்த வகையிலான வெறுப்புக்கும் இடம் கொடுக்காமலிருப்போம் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரான்ஸ் குடிமக்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, நான்கு சிறுவர்கள் உட்பட பிரான்ஸ் குடிமக்கள் 17 பேர் மாயமாகியுள்ளார்கள்.
மேக்ரான் உறுதி
ஹமாஸ் ஆயுதக்குழுவிடம் பிணைக்கைதிகளாக இருக்கும் பிரான்ஸ் குடிமக்களை பாதுகாப்பாக மீட்க எதையும் செய்யத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ள மேக்ரான், அவர்களை பத்திரமாக நாட்டுக்கு திருப்பி அழைத்து வருவதற்காக, இஸ்ரேல் அதிகாரிகள் மற்றும் பிரான்சின் கூட்டாளர்களுடன் இணைந்து பிரான்ஸ் தன் மக்களை மீட்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாகவும், பிரான்ஸ் தன் மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை என தான் பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்பங்களுக்கு தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், துயரம் என்னவென்றால், இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில், பிணைக்கைதிகளில் 13 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக ஹமாஸ் அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |