விரைவில் அரசியலுக்கு முழுக்கு: பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் அரசியலிலிருந்து விரைவில் விலக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விரைவில் அரசியலுக்கு முழுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் இன்னும் சரியாக ஒரு வருடத்தில் முடிவடைய உள்ளது.
2017ஆம் ஆண்டு, தனது 37ஆவது வயதில் முதன்முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மேக்ரான். பிரான்ஸ் அரசியல் வரலாற்றிலேயே அவ்வளவு இளம் வயதில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேக்ரான்தான்.

2022ஆம் ஆண்டு, அவர் இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்சில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
பிரான்சைப் பொருத்தவரை, அரசியல் சாசனத்தின்படி ஒரு நபர் மூன்றாவது முறை ஜனாதிபதியாக முடியாது. ஆகவே, அடுத்த தேர்தலில் மேக்ரான் போட்டியிட முடியாது.
இந்நிலையில், ஐரோப்பிய கவுன்சில் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக சைப்ரஸ் தீவுக்கு சென்றுள்ள மேக்ரான், சைப்ரஸின் தலைநகரான Nicosiaவில் மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர், நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் அரசியலில் ஈடுபடவில்லை, என் பதவிக்காலம் முடிந்தபின்பும் நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, தனது பதவிக்காலம் முடிவடைந்தபின், மேக்ரான் அரசியலுக்கு முழுக்குப் போட இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |