நாங்கள் பின்வாங்க மாட்டோம்! நினைவு தினத்தில் உக்ரைனுக்காக பேசிய மேக்ரான்
சர்வதேச D-Day நினைவு தினத்தில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், உக்ரைனுக்கு ஆதரவு அளித்து தனது உரையை நிகழ்த்தினார்.
நினைவு தின கூட்டம்
பிரான்சின் Normandyயில் உள்ள ஒமாஹா கடற்கரையில் 80வது சர்வதேச D-Day நினைவு தின கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, இத்தாலி, போலந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அரச குடும்பத்தினர், பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron) தனது உரையின்போது உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தார்.
மேக்ரான் பேச்சு
அவர் பேசுகையில், ''நமது கண்டத்தில் போர் திரும்புவதை எதிர்கொண்டு, அவர்கள் (இரண்டாம் உலகப்போர் வீரர்கள்) சவாலுக்காக போராடிய அனைவரையும் எதிர்கொண்டோம். எல்லைகளை மாற்றுவதற்கு, வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கு வலிமையைப் பயன்படுத்துபவர்களை எதிர்கொள்வோர், இங்கே தரையிறங்கியவர்களுக்கு தகுதியானவர்களாக இருப்போம்'' என்றார்.
மேலும் அவர், ''இன்று, உக்ரைனின் ஜனாதிபதியாகிய உங்களின் இருப்பு இங்கே அனைத்தையும் கூறுகிறது. உக்ரேனியர்களின் துணிச்சலுக்கும், சுதந்திர உணர்வுக்கும் நன்றி. நாங்கள் இங்கே இருக்கிறோம், பின்வாங்க மாட்டோம்'' என்றார்.
அதனைத் தொடர்ந்து மூன்று வீரர்களுக்கு பிரான்சின் உயரிய தகுதியான Legion of Honor விருதை மேக்ரான் வழங்கினார். ஜோசப் மில்லர், அர்லேஸ்டெர் பிரவுன் மற்றும் ரிச்சர்டு ரங் ஆகியோர் 15 வீரர்களுடன் கவுரவிக்கப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |