ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய பிரான்ஸ்: மேக்ரான் வெளியிட்டுள்ள செய்தி
ரஷ்யாவுக்கு சொந்தமானது என கூறப்படும் எண்ணெய்க் கப்பல் ஒன்றை பிரெஞ்சு கடற்படை கைப்பற்றியுள்ளது.
மேக்ரான் வெளியிட்டுள்ள செய்தி
சமூக ஊடகமான எக்ஸில் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் அந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

நேற்று காலை, ரஷ்யாவிலிருந்து வந்துகொண்டிருந்த ’Grinch’ என பெயரிடப்பட்ட எண்ணெய்க் கப்பல் ஒன்றை பிரெஞ்சு கடற்படை கைப்பற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
We will not tolerate any violation.
— Emmanuel Macron (@EmmanuelMacron) January 22, 2026
This morning, the French Navy boarded an oil tanker coming from Russia, subject to international sanctions and suspected of flying a false flag.
The operation was conducted on the high seas in the Mediterranean,… pic.twitter.com/zhXVdzPx1r
அத்துடன், அந்தக் கப்பல் சர்வதேச தடைகள் விதிக்கப்பட்ட கப்பல் என்றும், கூட்டாளர்கள் பலரது உதவியுடன் அந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
Grinch என்னும் எண்ணெய்க் கப்பல் பிரித்தானியாவால் தடை விதிக்கப்பட்ட கப்பல் ஆகும்.

Credit : Reuters
அத்துடன், அதே கப்பலின் பதிவு எண் கொண்ட Carl என்னும் கப்பலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைவிதிக்கப்பட்ட கப்பல் ஆகும்.
இந்நிலையில், அந்த ரஷ்யக் கப்பல் கைப்பற்றப்பட்டதற்கு உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மேக்ரானுக்கு நன்றி தெரிவித்துகொண்டுள்ளார்.
ஐரோப்பிய கடற்பகுதியில் நடமாடும் ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும், அவைகள் மீது கடினமான தடைகள் விதிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ள ஜெலன்ஸ்கி, ரஷ்ய எண்ணெய், ரஷ்யப் போருக்கு நிதி உதவி செய்வதைத் தடுக்க, இதுபோன்ற நடவடிக்கைகள்தான் தேவை என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |