ராஜினாமா செய்ய முடியாது... பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
பிரான்சில் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்துவரும் நிலையில், ஜனாதிபதி மேக்ரான் ராஜினாமா செய்யவேண்டும் என குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.
ஆனால், தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.
ராஜினாமா செய்ய முடியாது...
நாட்டின் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்காக, தான் ஜனாதிபதி பதவியில் நீடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் இமானுவல் மேக்ரான்.
பிரான்ஸ் மக்கள் எனக்குக் கொடுத்துள்ள பொறுப்பு, சேவை செய்வது மட்டுமே என்பதை மறக்கவேண்டாம் என்று கூறியுள்ள மேக்ரான், பிரான்ஸ் மக்களின் அனுதின கேள்விகளுக்கு பதிலளிப்பதும், பிரான்சின் சுதந்திரத்துக்காக இயன்ற அனைத்தையும் செய்வதுமே தன் கடமை என்றும் கூறியுள்ளார்.
அது மட்டுமே முக்கியம் என்று கூறிய மேக்ரான், மீதமுள்ளது அரசு வேலை, நான் நிலைத்தன்மையை உறுதி செய்வதை தொடர்வேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பிரான்சில் நிலவும் அமைதியின்மைக்கு தான்தான் காரணம் எனக்கூறும் எதிர்க்கட்சிகளைச் சாடிய மேக்ரான், பிரதமர் செபாஸ்டியனின் அரசை குலைக்க வேலை செய்துவரும் அந்த அரசியல் கட்சிகள்தான் பிரான்சில் நிலவும் அமைதின்மை உணர்வுக்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |