பிரான்ஸ் எரிபொருள் நெருக்கடி - வளைகுடா நாடுகளிலிருந்து கூடுதல் டீசல் வாங்க திட்டம்
Macron Secures Gulf Diesel Amid Crisis: பிரான்ஸ், வளைகுடா நாடுகளிலிருந்து கூடுதல் டீசல் வாங்கும் முயற் சித்துவருகிறது.
டீசல் இறக்குமதி செய்ய திட்டம்
பிரான்சில் எரிபொருள் விலை அதிகரித்து, மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வளைகுடா நாடுகளிலிருந்து கூடுதல் டீசல் இறக்குமதி செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

சமீபத்தில், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடன் பிரான்ஸ் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பிரான்ஸ் அதிகளவு டீசல் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பிரான்சில், எரிபொருள் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால், பொது போக்குவரத்து, லொறி சாரதிகள், விவசாயிகள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல நகரங்களில் மக்கள் எரிபொருள் விலை குறைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“பிரான்ஸ் மக்கள் எரிபொருள் நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடாது. வளைகுடா நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பயன்படுத்தி, எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்கிறோம்” என்று இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் விதிகள் காரணமாக, டீசல் இறக்குமதி அதிகரிப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், “புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மீது கவனம் செலுத்தாமல், மீண்டும் புதைப்படிம எரிபொருளில் நம்பிக்கை வைக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள பிரான்சின் எரிசக்தி அமைச்சகம், “தற்காலிகமாக டீசல் இறக்குமதி அதிகரிக்கப்படும். ஆனால், நீண்ட காலத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் முன்னேற்றப்படும்” என்று விளக்கியுள்ளது.
இந்த நடவடிக்கை, பிரான்சில் சமீபத்தில் நடந்த கலவரங்கள், விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு அரசின் பதிலாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |