பிரான்சின் முக்கியமான கடற்படை கப்பலை காசாவுக்கு அனுப்பியுள்ள மேக்ரான்: பின்னணியில் ஒரு ரகசிய நோக்கம்
பிரான்ஸ் பிரம்மாண்ட போர்க்கப்பல் ஒன்றை காசாவுக்கு அனுப்பியுள்ள நிலையில், அது மருத்துவ உதவிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அதன் பின்னணியில் வேறு சில முக்கிய நோக்கங்களும் உள்ளதாக கருதப்படுகிறது.
கடற்படை கப்பலை காசாவுக்கு அனுப்பியுள்ள மேக்ரான்...
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், The Tonnerre எனப்படும் பிரம்மாண்ட கடற்படைக் கப்பல் ஒன்றை காசாவுக்கு அனுப்பியுள்ளார்.
காசா மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்காக அந்தக் கப்பல் காசாவுக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.
அந்தக் கப்பலில், 69 படுக்கைகள், இரண்டு அறுவை சிகிச்சை அறைகள், பல் சிகிச்சைக்கான வசதி என ஒரு சிறிய மருத்துவமனை அமைப்பே உள்ளது.
பின்னணியில் வேறு காரணங்கள்
அந்தக் கப்பலை காசாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்காக மேக்ரான் அனுப்பியுள்ளதாக கூறப்பட்டாலும், அதன் பின்னணியில் வேறு சில முக்கிய காரணங்களும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஏனென்றால், அது பிரான்ஸ் கடற்படையின் மிக முக்கிய கப்பல்களில் ஒன்றாகும். பல ஹெலிகொப்டர்களை அதன் மீது இறக்கலாம்.
BBC
ஆக, போர் பெரிதாகுமானால், காசா மற்றும் லெபனானில் வாழும் பிரான்ஸ் நாட்டவர்களை அங்கிருந்து மீட்டுக் கொண்டுவரவேண்டிய நிலை உருவாகலாம். அதற்கு இந்தக் கப்பல் பெரிதும் உதவியாக இருக்கும்.
இதுபோக, ஏற்கனவே இரண்டு பிரான்ஸ் போர்க்கப்பல்கள் மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
BBC
இன்னொரு விடயம் என்னவென்றால், காசா - இஸ்ரேல் மோதல் துவங்கியதிலிருந்து, மேக்ரான் இஸ்ரேலுக்கு அதிக அளவில் ஆதரவு தெரிவிப்பதாக பிரான்சில் விமர்சனம் எழுந்துள்ளது. இப்போது காசாவுக்கு மருத்துவ உதவிக்கு என்று கூறி ஒரு கப்பலை அனுப்பினால் மேக்ரான் மீதான விமர்சனத்தின் தீவிரம் குறையக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |