ஐரோப்பாவின் எதிர்காலத்திற்காக ஜேர்மனியுடன் 60 ஆண்டுகால உடன்படிக்கை! மேக்ரான் வெளியிட்ட பதிவு
60 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனி-பிரான்ஸ் தலைவர்கள் எடுத்த முக்கிய முடிவு குறித்த நினைவை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பகிர்ந்துள்ளார்.
ஜேர்மனியுடன் உடன்படிக்கை
கடந்த 1963ஆம் ஆண்டு ஜேர்மனியின் சேன்ஸலர் Konard Adenauer-யும், பிரான்ஸின் ராணுவ அதிகாரி Charles de Gaulle-வும் இதே நாளில் உடன்படிக்கை மேற்கொண்டனர்.
அந்த நிகழ்வு 60 ஆண்டுகளை எட்டியதைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இரு நாடுகளில் சார்பில் கலந்துகொண்ட தலைவர்களின் புகைப்படம் உள்ளது.
Am 22. Januar 1963, vor 60 Jahren, besiegelten Deutschland unter Konrad Adenauer und Frankreich unter Charles de Gaulle ihre Aussöhnung. An diesem Tag beschlossen unsere beiden Länder einer neuen Zukunft für Deutschland, Frankreich und Europa Tür und Tor zu öffnen. pic.twitter.com/QViaRkXxZJ
— Emmanuel Macron (@EmmanuelMacron) January 22, 2023
மேக்ரானின் பதிவு
மேலும் அவரது பதிவில், 'ஜனவரி 22, 1963 அன்று, 60 ஆண்டுகளுக்கு முன், Konard Adenauer-யின் ஜேர்மனி மற்றும் Charles de Gaulle-வின் பிரான்ஸும் தங்கள் நல்லிணக்கத்தை முத்திரையிட்டன.
அன்றைய தினம், ஐரோப்பாவுக்கும் நமது இரு நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனிக்கும் புதிய எதிர்காலத்திற்கான கதவுகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது' என தெரிவித்துள்ளார்.