ஒற்றுமையை குலைக்கிறார்: பிரெஞ்சு ஜனாதிபதியை காட்டமாக விமர்சித்த நேட்டோ அதிகாரிகள்
இது ஒற்றுமையை மொத்தமாக குலைக்கும் செயல் என நேட்டோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும் என்றால் கண்டிப்பாக நேட்டோ எதிர்வினையாற்றும்
ரஷ்யா மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்ற பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ள கருத்துக்கு பிரித்தானிய பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் தெரிவிக்கையில், உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்தினால், பிரான்ஸ் எதிர் தாக்குதலுக்கு தயாராகாது என்பதை இமானுவல் மேக்ரான் உறுதிப்படுத்தியுள்ளார்.
@getty
ஆனால், ரஷ்யா அணு ஆயுதம் பயன்படுத்துமானால், அதற்கான பின் விளைவுகளை கட்டாயம் எதிர்கொள்ள நேரிடும் என்பதே எங்கள் முடிவு என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் பென் வாலஸ்.
இதனிடையே, இமானுவல் மேக்ரான் ரஷ்யா மீதான தமது கருத்தை வெளிப்படையாக கூறியிருக்க கூடாது எனவும், இது ஒற்றுமையை மொத்தமாக குலைக்கும் செயல் எனவும் நேட்டோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@AP
உக்ரைன் மீது அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும் என்றால் கண்டிப்பாக நேட்டோ எதிர்வினையாற்றும் எனவும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் நேட்டோ அமைப்பின் திட்டம் என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்க நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் மறுத்துள்ளார்.
மேலும், ஒரு சிறிய அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது கூட மிகவும் தீவிரமான விஷயம் மற்றும் உக்ரைனில் போரின் தன்மையை அடிப்படையில் மாற்றும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
@getty