புலம்பெயர்தல் சட்டத்தில் மேக்ரான் கையெழுத்திடக்கூடாது... பிரான்ஸ் முழுவதும் திரண்ட பொதுமக்கள்
பிரான்ஸ் நிறைவேற்ற திட்டமிட்டுள்ள புலம்பெயர்தல் சட்டத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி கையெழுத்திடக்கூடாது என்று கோரி, பிரான்ஸ் முழுவதும் பொதுமக்கள் நேற்று தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கிய பொதுமக்கள்
பிரித்தானியா ஜேர்மனி போன்ற நாடுகளில் அரசியல்வாதிகள் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துவருகிறார்கள். கனடா போன்ற நாடுகளில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி பொதுமக்களும் புலம்பெயர்தலுக்கு எதிராக திரும்பியுள்ளார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், பிரான்ஸ் மக்கள் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கிய விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, பிரான்ஸ் நிறைவேற்ற திட்டமிட்டுள்ள புலம்பெயர்தல் சட்டத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி கையெழுத்திடக்கூடாது என்று கோரி, பிரான்ஸ் முழுவதும் பொதுமக்கள் நேற்று தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 150,000 பேர்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 15,000 பேர் உட்பட நாடு முழுவதும் சுமார் 75,000 பேர் ஆர்ப்பாட்டங்களில் ஏடுபட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், வலது சாரி அமைப்பொன்றோ, சுமார் 150,000 பேர் பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இறங்கியதாக தெரிவிக்கிறது.
இந்த புதிய புலம்பெயர்தல் சட்டம், வலதுசாரியினரின் கொள்கைபோல் உள்ளதாகவும், அது பிரான்சின் கொள்கைளுக்கு துரோகம் செய்வதாகவும் கூறி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
புதிய புலம்பெயர்தல் சட்டம், விரும்பத்தகாதவர்கள் என கருதப்படும் வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதை எளிதாக்குகிறது, வெளிநாட்டவர்கள் அரசு உதவிகளை பெறுவதையும், பிரான்ஸ் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரான்சுக்கு அழைத்துவருவதையும் கடினமாக்குகிறது.
இதற்கிடையில், இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானே, சட்டத்தின் சில சட்டப்பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிராக இருப்பதுபோல் தோன்றுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |