அமெரிக்காவில் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட மேக்ரான்: ஒரு சுவாரஸ்ய வீடியோ
நியூயார்க் நகரில் மேக்ரானை பயணிக்கவிடாமல் பொலிசார் தடுத்து நிறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட மேக்ரான்
நியூயார்க்கில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்துக்காக உலக நாடுகளின் தலைவர்கள் பலர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், பிரான்ஸ் தூதரகத்துக்குச் செல்ல முயன்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அமெரிக்க பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
New York police stopped French President Macron’s car coz the road was closed for Trump.
— KRK (@kamaalrkhan) September 23, 2025
So Macron got out, called Trump and jokingly asked him to clear the road. Then Trump asks him to walk to the French embassy!🤪😂 pic.twitter.com/j3Q0uwv0eA
மேக்ரானின் கார் தடுத்து நிறுத்தப்பட்டதும், காரிலிருந்து இறங்கிய மேக்ரான், சாலையின் மறுபக்கம் இருக்கும் பிரான்ஸ் தூதரகத்துக்குத் தான் செல்லவேண்டும் என பொலிசார் ஒருவரிடம் கூற, அவர் மேக்ரானிடம் மன்னிப்புக்கோரும் காட்சியை அந்த வீடியோவில் காணலாம்.
என்னை மன்னித்துவிடுங்கள் ஜனாதிபதி அவர்களே, ட்ரம்பின் மோட்டார் வாகன அணிவகுப்பு இந்த சாலையில் வருவதால் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று அந்த பொலிசார் கூறுகிறார்.
உடனே தனது மொபைலை எடுத்த மேக்ரான் ட்ரம்பை அழைத்து, உங்களால் சாலையோரமாக நிற்கிறேன் என வேடிக்கையாக கூறுவதையும் வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
மேக்ரான் சாலையோரமாக நடந்து செல்வதைக் கண்ட சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்க, உற்சாகத்துடன் அவர்களுடன் மேக்ரான் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காட்சிகளும் வெளியாக, அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |