கை குலுக்கும்போது இறுகப்பிடித்துக் கொண்ட ஜோ பைடன்! திகைத்து நின்ற பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்..வீடியோ
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோனை வரவேற்று கை குலுக்கியபோது, சில விநாடிகள் ஜோ பைடன் இறுகப் பிடித்துக் கொண்டார்.
மேக்ரானுக்கு வரவேற்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் முதல் அரசுப் பயணமாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்தார்.
அப்போது ஜோ பைடன் அவரை உற்சாகமாக வரவேற்றார். பைடன் மைக்கில் பேசிய பின் மேக்ரானுக்கு கை குலுக்கினார். ஆனால் உடனே கையை விடுக்காமல் 42 விநாடிகள் பைடன் இறுகப் பிடித்துக் கொண்டார். இது மேக்ரானுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாக தெரிந்தது. எனினும் அவர் சிரித்துக் கொண்டு நின்றார்.
Joe Biden's awkward 42 second handshake with President Macron pic.twitter.com/BmHnLK0tVp
— Charlie Spiering (@charliespiering) December 1, 2022
தவறான உச்சரிப்பு
மேலும், ஜோ பைடன் தனது உரையின் போது, பிரான்ஸ் ஜனாதிபதியின் பெயரை ''Macrone'' என தவறாக உச்சரித்ததுடன், ''alone'' எனவும் குறிப்பிட்டார். அதே போல், சுதந்திரப் போரின் சகாப்தத்தை சேர்ந்த பிரெஞ்சு உயர்குடிப் பிரபுவான Marquis de Lafayette-வை ''Marcus de Lafayette'' என மாற்றி குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இருநாடுகளின் தலைவர்களும் ரஷ்யாவிற்கு எதிராகவும், ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாகவும் தங்கள் நாடுகளின் கூட்டணியைக் கொண்டாடினர்.
அப்போது பிரான்ஸ் எங்கள் பழமையான நட்பு, சுதந்திரத்திற்கான காரணத்தில் எங்கள் அசைக்க முடியாத பங்குதாரர் என பைடன் கூறினார்.
அத்துடன் இரு நாடுகளின் இதயங்களாக இருக்கும் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் உலகளாவிய மனித உரிமைகளை பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா பாதுகாப்பதாகவும் அவர் தெரிவித்தார்.