ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும்! பிரேசிலிய வன்முறை சம்பவம் குறித்து இமானுவல் மேக்ரானின் பதிவு
பிரேசிலில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த வன்முறை குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ட்வீட் செய்துள்ளார்.
வன்முறை தாக்குதல்
பிரேசிலில் முன்னாள் ஜனாதிபதி போல்சானரோவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஜனாதிபதி மாளிகை மீது தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர்.
சுமார் 3000 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
AFP via Getty Images
மேக்ரான் ஆதரவு
இந்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரேசிலுக்கு தங்கள் ஆதரவு இருக்கும் என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'பிரேசிலிய மக்களின் விருப்பம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் மதிக்கப்பட வேண்டும்! பிரான்ஸின் அளவுகடந்த ஆதரவு இருக்கும் என்பதை ஜனாதிபதி லூலா எண்ணிக் கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
@Aurelien Meunier | Getty Images
@AFP via Getty Images
@AFP via Getty Images