மத்திய கிழக்கு தாக்குதல்களை நிறுத்தவேண்டும்: ஈரான் ஜனாதிபதியிடம் மேக்ரான் வலியுறுத்தல்
மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என தான் ஈரான் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதியிடம் மேக்ரான் வலியுறுத்தல்
சமூக ஊடகமான எக்ஸில் மேக்ரான் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், தான் ஈரான் ஜனாதிபதியான மசூத் பெசஸ்கியானை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டதாகவும், அப்போது, மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளத்தகாதவை என தான் கூறியதாகவும், அவற்றை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எரிசக்தி மற்றும் மக்கள் குடியிருப்புகளை பாதுகாக்கவேண்டும் என்றும், மீண்டும் ஹோர்மூஸ் ஜலசந்தியில் கப்பல்கள் சுதந்திரமாக பயணிக்கும் நிலை உருவாகவேண்டும் என்றும் தான் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார் மேக்ரான்.
அத்துடன், பதற்றத்தைத் தணிப்பதற்கான வழியை உருவாக்குவதற்கும், ஈரானின் அணு மற்றும் ஏவுகணைத் திட்டம், அத்துடன் அதன் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வழிவகுக்கும் ஒரு கட்டமைப்பை வழங்குவதற்கும், ஈரான் நல்லெண்ண பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று தான் கேட்டுக்கொண்டதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
Je me suis entretenu avec le Président iranien Massoud Pezeshkian.
— Emmanuel Macron (@EmmanuelMacron) March 24, 2026
J’ai rappelé l’absolue nécessité de mettre fin aux attaques inacceptables contre les pays de la région, à préserver les infrastructures énergétiques et civiles et à rétablir la liberté de navigation…
இறுதியாக, பிரான்ஸ் நாட்டவர்களான செசில் கோலர் மற்றும் ஜாக் பாரிஸ் ஆகியோரை கூடிய விரைவில் பிரான்சுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று தான் ஈரானை வலியுறுத்தியதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |