கொஞ்சம் பணிவுடன் இருங்கள்: ஜனாதிபதி வேட்பாளருக்கு மேக்ரான் குட்டு
Macron tells Marine Le Pen to stay humble ahead of French vote: தேர்தல் முடியும் வரை பணிவுடன் இருங்கள் என ஜனாதிபதி வேட்பாளரான மரீன் லெ பென்னை சாடியுள்ளார் மேக்ரான்.
முதலில் தேர்தல் நடக்கட்டும், மக்கள் யாரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யட்டும், அதுவரை கொஞ்சம் பணிவுடன் இருங்கள் என்கிறார் மேக்ரான்.
என்ன பிரச்சினை?
வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சேர்ந்த மரீன் லெ பென், உக்ரைன் தொடர்பில் கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் பேசிய மரீன் லெ பென், நாட்டின் அதிக பற்றாக்குறை மற்றும் பலவீனமான பொருளாதார வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி, இன்று பிரான்ஸ் மிகவும் அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது, ஆகவே, எங்களால் இனி உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்க முடியாது என்று கூறினார்.
மேக்ரான் குட்டு விடயம் என்னவென்றால், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்து ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது, வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சேர்ந்த மரீன் லெ பென்னுக்குத்தான் என கருதப்படுகிறது.
இந்நிலையில் மரீன் லெ பென் உக்ரைனுக்கு இனி உதவ முடியாது என்று கூற, இன்னும் தேர்தலே நடக்கவில்லை, அதற்குள் சிலர் ஜனாதிபதி ஆகிவிட்டதுபோல நடந்துகொள்கிறார்கள் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

கொஞ்சம் பிரான்ஸ் மக்களுக்கு மரியாதை கொடுங்கள், அவர்கள் தேர்தலில் வாக்களிக்கட்டும், அதுவரை பணிவாக இருங்கள் என்று கூறியுள்ளார் மேக்ரான்.
மரீன் லெ பென்னை பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லையென்றாலும், சிலருடைய பணிவற்ற தன்மை என்னை வியப்படையச் செய்கிறது என்று கூறியுள்ள மேக்ரான், பிரான்ஸ் மக்கள் தேர்தலில் வாக்களித்து ஜனாதிபதி யார் என முடிவு செய்யட்டும், அதுவரை பணிவுடன் இருங்கள் என்று கூறியுள்ளார்.