பிரான்ஸ் பாதுகாப்பு பிரச்சனைகளுடன் போராடி வருகிறது: மாநாட்டில் மேக்ரான் பேச்சு
ஜோர்டான் மாநாட்டில் பங்கேற்ற மேக்ரான், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையுடன் பிரான்ஸ் இணைந்துள்ளதாக கூறினார்.
ஜோர்டான் மாநாடு
ஈராக்கில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் ஜோர்டான் நாட்டில் ஒன்று கூடினர்.
இந்த மாநாட்டில் பிராந்திய போட்டியாளர்களான சவுதி அரேபியா மற்றும் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பிரச்சனைகள்
அப்போது பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், 'பிரான்ஸ் நாடானது பிராந்தியத்தின் பரந்த மத்தியத் தரைக் கடலில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நலன்களுக்காக ஸ்திரத்தன்மையுடன் இணைந்துள்ளது.
அத்துடன் வெளிநாட்டு தலையீடுகள், முட்டுக்கட்டைகள், பிளவுகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் ஆகியவற்றுடன் போராடி வருகிறது. கடந்த தசாப்தங்களில் ஈராக் அனேகமாக, பிராந்திய ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்ட முக்கிய நாடுகளில் ஒன்றாக இருக்கலாம்' என தெரிவித்தார்.
@Alaa Al Sukhni/Reuters
முன்னதாக, ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா பேசுகையில், 'உணவு, தண்ணீர், சுகாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் ஆகியவற்றுடன் பாதுகாப்பு மற்றும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது' என்று குறிப்பிட்டார்.
ஜோர்டான் மன்னருக்கு நன்றி கூறிய மேக்ரான்
இந்த நிலையில் இமானுவல் மேக்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஜோர்டான் ஒரு நட்பு நாடு மற்றும் மத்திய கிழக்கின் அமைதியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பங்குதாரர். நேற்று நடைபெற்ற இரண்டாவது பாக்தாத் உச்சிமாநாடு உரையாடல் மற்றும் ஒத்துழைப்பில் இதை விளக்குகிறது. மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் ஜோர்டான் மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.
மேலும் மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
La Jordanie est un pays ami et un partenaire qui occupe un rôle majeur pour la paix au Moyen-Orient. Le 2e Sommet de Bagdad qui s’est tenu hier dans le dialogue et la coopération l’illustre. Merci au Roi Abdallah II et au peuple jordanien pour leur accueil. pic.twitter.com/3PQiWeDIJD
— Emmanuel Macron (@EmmanuelMacron) December 21, 2022
@Khalil Mazraawi/AFP