பிரித்தானிய பிரதமர் ராஜினாமா... மேக்ரான் வெளியிட்டுள்ள செய்தி
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பலர் ஸ்டார்மருக்கு புகழஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
உலகத் தலைவர்கள் புகழஞ்சலி
ஸ்டார்மரின் ராஜினாமா செய்தி வெளியான சிறிது நேரத்தில் சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்ட ஐரோப்பிய ஆணையத் தலைவரான உர்சுலா வோன் டெர் லேயன், அன்புள்ள கெய்ர் அவர்களே, வெறும் இரண்டு ஆண்டுகளில் நீங்கள் ஒரு ராஜதந்திரியாக ஆகிவிட்டீர்கள். உங்கள் நிலையை அடைய, பல தலைவர்களுக்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடும். உங்களால் ஐரோப்பிய மற்றும் உக்ரேனியப் பாதுகாப்பு வலுப்பெற்றுள்ளது, நன்றி, என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரைப்போலவே, ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய தலைமை செய்தித்தொடர்பாளர் என பல தலைவர்களும் ஸ்டார்மருக்கு புகழஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
மேக்ரான் வெளியிட்டுள்ள செய்தி

ஸ்டார்மரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சமூக ஊடகமான எக்ஸில் ஸ்டார்மருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
French President Emmanuel Macron shared a post on social media, "I would like to thank the Prime Minister Keir Starmer for his contribution to strengthening the Franco-British relationship, his commitment within the coalition of volunteers for Ukraine, as well as to the revival… pic.twitter.com/HNFX8cnSNz
— United News of India (@uniindianews) June 22, 2026
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கும், உக்ரைனுக்கான தன்னார்வலர் கூட்டணியில் அவர் காட்டிய அர்ப்பணிப்பிற்கும், பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவைப் புதுப்பிப்பதற்கும், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆற்றிய பங்களிப்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில், குறிப்பாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நமது பிரான்ஸ் - பிரித்தானிய உச்சி மாநாட்டின் போது, இணைந்து நிறைவேற்றப்பட்ட பணிகள் அந்த அர்ப்பணிப்புக்குச் சான்றாக அமைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |