இன்னும் சில நாட்களில் அமெரிக்கா-பிரான்ஸ் இடையே இது நடக்கும்! பிரெஞ்சு அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எதிர்வரும் சில நாட்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோன் விவாதிப்பார் என பிரெஞ்சு அரசு செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா இடையே ஏற்பட்ட AUKUS ஒப்பந்தத்தை தொடர்ந்து, பிரான்ஸ் உடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா ரத்து செய்தது.
இதனால் கடும் கோபமடைந்த பிரான்ஸ், அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான அதன் தூதர்களை திரும்ப அழைத்துள்ளது.
இந்நிலையில் இன்று BFM TV-க்கு பேட்டியளித்த பிரான்ஸ் அரசாங்க செய்தித் தொடர்பாளர் Gabriel Attal, ஜனாதிபதி பைடன் பிரான்ஸ் ஜனாதிபதியிடம் பேசும்படி கேட்டார்.
ஜனாதிபதி மாக்ரோனுக்கும் ஜனாதிபதி பைடனுக்கும் இடையே அடுத்த சில நாட்களில் தொலைபேசியில் விவாதம் நடைபெறும்.
நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பிரான்ஸ் விளக்கம் பெற விரும்புகிறது. குறிப்பாக பிரான்சுக்கு இழப்பீடு வழங்குவது தொடார்பில் விவாதங்கள் நடைபெற வேண்டும் என Gabriel Attal கூறினார்.