புதிய உச்சத்தை தொட்ட பாதிப்பு.. பிரான்சில் பொதுமுடக்கம் வருமா? ஜனாதிபதி தலைமையில் கூட்டம்
பிரான்சில் கொரோனா நிலைமை குறித்து ஆலோசிக்க திங்கட்கிழமை மாக்ரோன் ஜனாதிபதி தலைமையில் கூட்டம் நடைபெறும் என பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை அன்று பிரான்சில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
பிரான்சில் வியாழக்கிழமை அன்று புதிதாக 91,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
ஆனால், விடுமுறை நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு, மூடல்கள் அல்லது பிற கட்டுப்பாடுகளை விதிப்பதை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.
டிசம்பர் 28 முதல், அதன் வெளிநாட்டு பிராந்தியங்களுக்கு செல்லும் பயணிகள் தொற்று பாதிப்பு இல்லை என சமீபத்தில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையை காட்ட வேண்டும் என்று பிரான்ஸ் அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
Guadeloupe,Martinique, French Guiana, La Reunion மற்றும் New Caledonia உள்ளிட்ட அதன் பிரதேசங்கள், பிரான்சில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.