சுவிஸ் மதுபான விடுதி தீவிபத்து: நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி
சுவிட்சர்லாந்திலுள்ள மதுபான விடுதி ஒன்றில் நிகழ்ந்த தீவிபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக நடத்தப்படும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்து செல்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி.
நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள Crans-Montana என்னுமிடத்தில் அமைந்துள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டின் Le Constellation என்னும் மதுபான விடுதியில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த தீவிபத்தில் 40 பேர் பலியானார்கள், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள்.

Credits: X video/AFP
இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமையன்று, அந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக, சுவிட்சர்லாந்தில், தேசிய அளவில் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது.
அந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, வெள்ளிக்கிழமையன்று சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
Credits: Reuters
சுவிஸ் மதுபான விடுதி தீவிபத்தில் உயிரிழந்தவர்களில் பிரான்ஸ் நாட்டவர்கள் ஒன்பது பேரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |