வரிவிதிப்புகள் இடைநிறுத்தம் தொடர்பில் மேக்ரான் வெளியிட்டுள்ள செய்தி
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது வரிவிதிப்புகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது தொடர்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரு நல்லதும் ஒரு கெட்டதும்...
ட்ரம்பின் வரிவிதிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள விடயத்தால் ஒரு நன்மை உள்ளதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
La suspension partielle des tarifs américains pour 90 jours est un signal et une porte ouverte à la négociation.
— Emmanuel Macron (@EmmanuelMacron) April 11, 2025
Mais cette pause reste fragile.
Fragile, car les droits de 25% sur l’acier, l’aluminium et l’automobile et les tarifs à 10% sur tous les autres produits…
அது என்னவென்றால், வரிவிதிப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது ஒரு நல்ல அறிகுறி, அதனால் பேச்சுவார்த்தைகளுக்கு இடம் உருவாகியுள்ளது.
அதே நேரத்தில், இது தற்காலிகமான ஒரு நிறுத்தம்தான். ஏனென்றால், இன்னமும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீதான 25 சதவிகித வரிவிதிப்புகளும், பிற பொருட்கள் மீதான 10 சதவிகித வரிவிதிப்புகளும் இன்னமும் அமுலில்தான் உள்ளன.
REUTERS/Stephanie Lecocq/File Photo
ஆகவே, இது ஒரு நிலையற்ற இடைநிறுத்தம்தான் என்று கூறியுள்ள மேக்ரான், 90 நாட்களுக்கு வரிவிதிப்புகள் இடைநிறுத்தம் என்றால், 90 நாட்களுக்கு நமது வர்த்தகங்கள் அடுத்து என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில்தான் இருக்கமுடியும் என்றும், அதனால்தான் அதை நிலையற்ற இடைநிறுத்தம் என தான் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.