உக்ரைன் மக்களே உங்களுக்காக நாங்கள் துணை நிற்கிறோம்: போர் ஓர் ஆண்டை எட்டிய நிலையில் மேக்ரானின் பதிவு
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் ஓர் ஆண்டை எட்டிய நிலையில், பிரான்ஸ் உங்களுக்கு துணை நிற்கும் என உக்ரைனை குறிப்பிட்டு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதிவிட்டுள்ளார்.
ஓர் ஆண்டை எட்டிய போர்
ரஷ்யா தொடங்கிய போர் இன்றுடன் ஓர் ஆண்டை எட்டியுள்ளது. இந்த போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு பல நாடுகள் உதவி புரிந்து வருகின்றன.
குறிப்பாக ராணுவ உதவிகளை அளிக்குமாறு ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா, ஜேர்மனி, போலந்து ஆகிய நாடுகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக கூறி வரும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், சமீபத்தில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தோற்க வேண்டும் என்று கூறினார்.
@Alexey Furman/Getty Images Europe
மேக்ரானின் பதிவு
இந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கி ஒரு வருடம் ஆகியுள்ளது. இதனை குறிப்பிட்டு மேக்ரான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'உக்ரைன் மக்களே உங்களின் ஒற்றுமைக்கும், வெற்றிக்கும் மற்றும் அமைதிக்கும் பிரான்ஸ் உங்கள் பக்கம் நிற்கிறது' என கூறியுள்ளார்.
People of Ukraine,
— Emmanuel Macron (@EmmanuelMacron) February 24, 2023
France stands by your side
To solidarity. To victory. To peace.
@Getty Images