அமெரிக்கா, சீனாவிற்கு எதிராக புதிய உலக ஒழுங்கு - இந்தியாவிற்கும் மேக்ரான் அழைப்பு
அமெரிக்கா, சீனாவிற்கு எதிராக புதிய உலக ஒழுங்கை உருவாக்க வேண்டும் என மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா, சீனாவிற்கு எதிராக புதிய உலக ஒழுங்கு
அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹார்மோஸ் நீரிணையை திறக்க ஐரோப்பிய நாடுகள் தங்கள் கடற்படையை அனுப்ப ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட எந்த நாடுகளும் உதவ முன்வராத நிலையில், கோபமடைந்த டிரம்ப் நேட்டோவில் இருந்து விலக போவதாக மிரட்டியதோடு, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானையும் விமர்சித்து வந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா, சீனாவை சாராத புதிய உலக ஒழுங்கை உருவாக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார்.
மேக்ரான் அழைப்பு
அரசுமுறை பயணமாக தென் கொரியா சென்றுள்ள இமானுவல் மேக்ரான், அங்குள்ள யோன்சே பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றினார்.

இதில் பேசிய அவர், "பல தசாப்தங்களாக, இந்த சர்வதேச ஒழுங்கு மற்றும் நம்மிடம் இருந்த சில உறுதிகளின் அடிப்படையில், ஒருவித ஸ்திரத்தன்மை இருந்தது. ஆனால் இப்போது அது ஏற்ற இறக்கமாக உள்ளது.
இந்த புதிய சீர்குலைவில் நாம் செயலற்று இருக்கக்கூடாது. நிச்சயமற்ற தன்மையில் உள்ள சர்வதேச ஒழுங்கு, அதிகரிக்கும் உலகளாவிய சீர்குலைவுக்கு எதிராக செயல்பட்டு நாம் ஒரு புதிய ஒழுங்கைக் கட்டியெழுப்ப வேண்டும்.
அமெரிக்காவின் கணிக்க முடியாத தன்மை மற்றும் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நடுத்தர சக்திகள் ஓரணியில் திரண்டு செயலாற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |