குழந்தைகள் மீது குண்டு வீசுவதை நிறுத்துங்கள்! மேக்ரான்
காசா மீது குண்டுவீசி பொதுமக்கள், குழந்தைகளை இஸ்ரேல் கொல்வதை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
மேக்ரான் வலியுறுத்தல்
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என கூறியுள்ள ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், குழந்தைகள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பான நேர்காணல் அளித்துள்ள மேக்ரான், 'குழந்தைகள் மீது குண்டு வீசப்படுவதற்கு நியாயப்படுத்துதல் என்பது இல்லை. போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கு நன்மை பயக்கும் என்றும் மேக்ரான் கூறியுள்ளார். அத்துடன் அவர், 'ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளை பிரான்ஸ் தெளிவாக கண்டிக்கிறது. காஸாவில் இந்த குண்டுத் தாக்குதலை நிறுத்துமாறு நாங்கள் அவர்களை வலியுறுத்துகிறோம்' என தெரிவித்துள்ளார்.
மேலும் போர்நிறுத்தத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மற்றும் பிரித்தானிய ஜனாதிபதி ரிஷி சுனக் ஆகியோரையும் மேக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
போர் நிறுத்த அழைப்புகள் நிராகரிப்பு
அத்துடன் இந்த குழந்தைகள், இந்தப் பெண்கள், இந்த வயதானவர்கள் குண்டுவீசி கொல்லப்படுகிறார்கள். எனவே அதற்கு எந்த காரணமும் இல்லை, சட்டப்பூர்வமும் இல்லை. எனவே இஸ்ரேலை நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம் எனவும் மேக்ரான் குறிப்பிட்டார்.
ஆனால், ஜோ பைடன் மற்றும் ரிஷி சுனக் இருவரும் 'குறிப்பிட்ட இடைநிறுத்தங்களை' ஆதரித்தாலும், போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளையும் நிராகரித்தனர்.
AP
அதேபோல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 'ஹமாஸுடன் போர் நிறுத்தம் என்பது அவர்களிடம் சரணடைவது, பயங்கரவாதத்திடம் சரணடைவதும் ஆகும்' என தெரிவித்தார்.
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |