பிரான்ஸ் காட்டுத்தீ... ஜனாதிபதி மேக்ரான் கடும் எச்சரிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, காட்டின் 10 சதவிகித பரப்பை கபளீகரம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காட்டில் தீவைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான மேக்ரான்.
பிரான்ஸ் காட்டுத்தீ...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ 35,000 ஹெக்டேர் சதவிகித காட்டை கபளீகரம் செய்துவிட்ட நிலையில், வேண்டுமென்றேயோ அல்லது தெரியாமலோ தீயை துவக்கிய பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் ஒருவர் தன்னார்வலராக செயல்பட்ட தீயணைப்புவீரர் என்னும் செய்தி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஜனாதிபதி மேக்ரான் கடும் எச்சரிக்கை
இந்நிலையில், Fontainebleau காட்டில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், இரண்டாம் உலகப்போருக்குப் பின் பிரான்ஸ் இந்த அளவுக்கு பல இடங்களில் காட்டுத்தீயை சந்தித்ததில்லை என்று கூறியுள்ளார்.
ஒவ்வொருமுறை காட்டுத்தீ ஏற்படும்போதும், நமது நாடு தாக்குதலுக்குள்ளாகிறது என்பதால், தீவைத்தவர்கள் தப்பவிடப்படமாட்டார்கள் என எச்சரித்துள்ளார் அவர்.

இதற்கிடையில், வெப்பம் அதிகரித்துவருவதாலும், காற்று வீசுவதாலும், பல இடங்களில் ஆங்காங்கே இன்னமும் தீ எரிந்துகொண்டிருக்கிறதைக் காணமுடிகிறது என்று கூறியுள்ளார் நகர தீயணைப்புத்துறை தலைவர்.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி, சுமார் 950 தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |