இஸ்ரேல் ஹமாஸ் அமைதி ஒப்பந்தம்: பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வரவேற்பு
அமெரிக்க ஆதரவுடன் காசா போர்நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பில் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வரவேற்பு
அது குறித்து அவர் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பிணைக்கைதிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், காசாவிலிருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும், மத்திய கிழக்கு பகுதி முழுவதற்குமே, இது பெரும் நம்பிக்கையை அளிக்கும் செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
Great hope for the hostages and their families, for the Palestinians in Gaza, and for the entire region.
— Emmanuel Macron (@EmmanuelMacron) October 9, 2025
I welcome the agreement reached overnight for the release of the hostages and the ceasefire in Gaza, and I commend the efforts of President @realDonaldTrump, as well as…
காசா போர்நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பில் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை தான் வரவேற்பதாகவும், அதற்காக முயற்சிகள் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கத்தார், எகிப்து மற்றும் துருக்கி நாட்டு மத்தியஸ்தர்களுக்கும் தான் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |