பிரதமர் நரேந்திர மோடியை உற்சாகமாக வரவேற்ற மேக்ரான்: அவர் கூறிய விடயம்
பிரான்சிற்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் இமானுவல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார்.
உற்சாகமாக வரவேற்பு
பாரத் இன்னொவேட்ஸ் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார்.
நீஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை, பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார்.
பின்னர் 'பாரத் இன்னோவேட்ஸ்' என்ற இந்திய தொழில்நுட்பக் கண்காட்சி தொடங்கியது. நிகழ்வின் தொடக்க விழாவில் பேசிய இமானுவல் மேக்ரான், இந்தியாவை ஒரு முக்கியமான புத்தாக்க நாடு என்று புகழ்ந்தார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே
அத்துடன் 'பிரான்ஸ் எத்தகைய நாடு' என்பதை முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைத்து, அவர்களை ஈர்க்க விரும்புவதாக அவர் கூறினார்.
மேலும் அவர், செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நாடு பிரான்ஸ் என்று சுட்டிக்காட்டினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "இந்தியாவின் பாதுகாப்புத் துறையும் புத்தாக்கத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இன்று பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான நூற்றுக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் அற்புதமான பணிகளை செய்து வருகின்றன. சமீபத்தில் இந்தியாவின் அணுசக்தி துறையிலும் முக்கிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பது இந்தியாவின் மரபணுவிலேயே இருக்கிறது" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |