வரவேற்கிறோம்...’ பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு
French President Emmanuel Macron welcomes UK Prime Minister Andy Burnham's idea of Britain rejoining the European Union: பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணையும் திட்டத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வரவேற்றுள்ளார்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்தை மேக்ரான் வரவேற்றுள்ளார்.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்...
சமீபத்தில் பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்த பிரதமர் ஆன்டி பர்னாம், பிரெக்சிட்டால் பிரித்தானியாவுக்கு நன்மையை விட, பாதிப்புதான் அதிகம் என்று கூறியுள்ளார்.

ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை சரி செய்ய தான் முயற்சி செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி, ஒரு படி மேலேயே போய், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையக்கூடும் என்றும் கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.
மேக்ரான் வரவேற்பு
இந்நிலையில், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பான ஆன்டி பர்னாமின் திட்டம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கருத்து தெரிவித்துள்ளார்.

’Welcome back’ என்று ஆங்கிலத்தில் கூறிய மேக்ரான், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்புமானால், பிரதமர் ஆன்டி பர்னாம் அந்த பாதையில் பயணிப்பாரானால், அது பிரித்தானியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஒரு நல்ல செய்தி என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.