எங்கள் நாட்டிற்கு முதலாவதாக உங்கள் வருகை..பெருமை கொள்கிறோம்: இமானுவல் மேக்ரான்
ஜப்பான் பிரதமரை வரவேற்ற இமானுவல் மேக்ரான், அவரது பயணத்தின் முதல் நாடாக பிரான்ஸ் இருப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஃபுமியோவை வரவேற்ற மேக்ரான்
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கான ஒரு வாரகால பயணத்தைத் தொடங்கினார்.
அவரது பயணத்தின் முதல் இடமாக பிரான்ஸின் பாரிஸ் அமைந்தது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்தித்த ஃபுமியோ, வட கொரியா மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
@Ludovic Marin/AFP/Getty Images
இந்த நிலையில் ஃபுமியோவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மேக்ரான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் வாழ்த்து
அத்துடன், 'அன்புள்ள ஃபுமியோ, உங்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் முதல் நிறுத்தமாக பிரான்ஸ் பெருமை கொள்கிறது.
ஜப்பானின் G7 தலைவர் பதவிக்கு உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். நமக்கு முன்னால் உள்ள சவால்கள் மிகப் பெரியவை. நாங்கள் ஒன்றாக அவர்களை வெல்வோம்!' என பதிவிட்டுள்ளார்.
Cher Fumio, la France est honorée d'être la première étape de votre tournée en Europe. Je vous souhaite mes vœux de succès pour la présidence japonaise du G7. Les défis qui nous attendent sont immenses. Nous les surmonterons, ensemble ! pic.twitter.com/aZpc8eHf07
— Emmanuel Macron (@EmmanuelMacron) January 9, 2023