உக்ரைனுக்கு போர் விமானங்கள்: ரஷ்யாவுக்கு எரிச்சலையூட்டும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
ரஷ்யாவுடன் மோதவேண்டாம் என முன்பு நேட்டோ நாடுகளை அறிவுறுத்திவந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானே இப்போது முற்றிலுமாக ரஷ்யாவுக்கு எரிச்சலூட்டும் அறிக்கைகளை விடுத்துக்கொண்டே இருப்பது நேட்டோ நாடுகளுக்கே கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
உக்ரைனுக்கு போர் விமானங்கள்
உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்ப இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். Mirage 2000 வகை ஜெட் விமானங்களை உக்ரைனுக்கு அளிக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
என்றாலும், அந்த விமானங்கள் எப்போது உக்ரைனுக்கு அனுப்பப்படும், எத்தனை விமானங்கள் அனுப்பப்படும் என்பது தொடர்பான விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. அத்துடன், அந்த விமானங்களை இயக்க உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் என்றும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
வீடியோவை காண
உக்ரைனுக்கு விமானங்களைக் கொடுப்பது, ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்துவது போன்ற செயல்கள் நேட்டோவுடன் நேரடி போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ள நிலையில், அவருக்கு எரிச்சலூட்டும் வகையில் தொடர்ந்து மேக்ரான் அறிக்கைகள் விட்டுவருவது, நேட்டோ நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |