பிரான்ஸ் நிறைவேற்றிய புதிய புலம்பெயர்தல் சட்டத்துக்கு மேக்ரான் கட்சியிலேயே எதிர்ப்பு: ராஜினாமா செய்த அமைச்சர்
பிரான்ஸ் நிறைவேற்றிய சர்ச்சைக்குரிய புலம்பெயர்தல் சட்டத்துக்கு, ஆளும் மேக்ரான் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
சர்ச்சைக்குரிய புலம்பெயர்தல் சட்டம்
பிரான்ஸ் நிறைவேற்றியுள்ள புதிய புலம்பெயர்தல் சட்டம், குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் மீது கண்டிப்புடன் நடந்து, அவர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றும் நோக்கம் கொண்டதாகும்.
மேலும், சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் என கருதப்படும் வெளிநாட்டவர்களை பிரான்சிலிருந்து நாடுகடத்துதலை இந்த சட்டம் விரைவாக்க உதவும். ஆனால், அது மிகவும் கடுமையாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
Photograph: Sarah Meyssonnier/Reuters
ஆளும் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு
சொல்லப்போனால், புதிய புலம்பெயர்தல் சட்டத்துக்கு ஆளும் மேக்ரான் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.
அந்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் மேக்ரான் கட்சியைச் சேர்ந்த 27 பேர் அதற்கெதிராக வாக்களிக்க, 32 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவேயில்லை.
ராஜினாமா செய்த அமைச்சர்
இந்நிலையில், சர்ச்சைக்குரிய புதிய புலம்பெயர்தல் சட்டத்தை எதிர்த்து, பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Aurélien Rousseau, ராஜினாமா செய்துள்ளார்.
இத்தனைக்கும், அவர் ஐந்து மாதங்களுக்கு முன்புதான் சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்றிருந்தார். செவ்வாயன்று புதிய புலம்பெயர்தல் சட்டம் நிறைவேற்றப்பட்ட உடன்தானே, Aurélien Rousseau தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
மேலும், போக்குவரத்துத்துறை அமைச்சரான Clément Beaune உட்பட பல அமைச்சர்கள் இந்த புலம்பெயர்தல் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |