ரூ 5 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம்... ரூ 828 கோடிக்கு விற்பனை: Redbus உருவான கதை
சொந்த ஊருக்கு செல்ல பேருந்து முன்பதிவுக்கு சிரமப்பட்ட இளைஞர் ஒருவர், தமது நண்பர்கள் இருவருடன் இணைந்து தொடங்கிய நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 6985 கோடி.
பேருந்து முன்பதிவுக்காக போராடியவர்
தென்னிந்தியாவின் ஒருங்கிணைந்த ஆந்திரா பகுதியை சேர்ந்தவர் Phanindra Sama. இவரே சொந்த ஊருக்கு செல்ல பேருந்து முன்பதிவுக்காக போராடியவர். அதன் பின்னர் தமது நண்பர்கள் இருவருடன் இணைந்து Redbus என்ற நிறுவனத்தை உருவாக்கியவர்.
BITS, Pilani மாணவரான பனீந்திர சாமா தமது கல்லூரி நாட்களில் அறிமுகமான சுதாகர் பசுபுனூரி மற்றும் சரண் பத்மராஜு ஆகியோருடன் இணைந்து தொடங்கிய நிறுவனம் தான் Redbus.
இதற்கு முன்னர் நண்பர்கள் மூவரும் பல நிறுவனங்களில் பணியாற்றியுள்ளனர். 2006ல் பனீந்திர சாமா முன்வைத்த Redbus திட்டம் குறித்து விவாதிக்கும் போது, மூவரிடத்திலும் வெறும் ரூ 5 லட்சம் மட்டுமே இருந்துள்ளது.
அந்த தொகையை முதலீடாக வைத்து தொடங்கப்பட்ட நிறுவனம் தான் Redbus. 2013ல் Redbus நிறுவனத்தை Ibibo குழுமம் ரூ 828 கோடிக்கு வாங்கியது. தென் ஆப்பிரிக்காவின் Naspers மற்றும் சீனாவின் Tencent ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சி தான் இந்த Ibibo குழுமம்.
7 நாடுகளில் Redbus நிறுவனம்
2007ல் 1 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை Redbus நிறுவனம் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பெரும் முதலீட்டாளர்கள் சிலரும் Redbus நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தனர்.
தந்தையின் ரூ 690,000 கோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி... தனியாக சாதித்த இளைஞர்: அவரது சொத்து மதிப்பு
சில ஆண்டுகளிலேயே Redbus நிறுவனம் இந்தியாவில் அறியப்படும் நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சி கண்டது. தற்போது 7 நாடுகளில் செயல்பட்டுவரும் Redbus நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 6985 கோடி என்றே கூறப்படுகிறது.
தற்போது Westbridge Capital நிறுவனத்தின் ஆலோசகராக செயல்பட்டுவரும் பனீந்திர சாமாவின் சொத்துமதிப்பு ரூ 911 கோடி என்றே கூறப்படுகிறது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |