ரூ. 1 லட்சம் கோடிக்கு தயாரிக்கப்பட்ட Apple போன்கள்., Made in India iPhone புதிய சாதனை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Apple iPhone புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
கோடிக்கணக்கில் புதிய பொருட்களை தயாரித்து, பாரிய அளவில் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
சென்னை நிறுவனம் தயாரித்த உலகின் முதல் உயர் மின்னழுத்த Electric Bike., Tn Global Investors Meetல் அறிமுகம்
2023ல் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் புதிய ஐபோன்கள் இங்கு தயாரிக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் ரூ. 65,000 கோடி மதிப்பிலான ஐபோன்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது தெளிவாகிறது. இவற்றின் உண்மையான சந்தை மதிப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
இந்தியாவில் அதன் iPhone தயாரிப்பு தொழிற்சாலை திறக்கப்பட்டதில் இருந்து அதே பழைய ஐபோன் மாடல்களை தயாரித்து வரும் Apple, 2023ஆம் ஆண்டில் iPhone 15 என்ற புதிய மொடலை தயாரித்தது.
இங்கிருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. production-linked incentive (PLI) திட்டத்தின் கீழ் ஆப்பிள் இந்த தயாரிப்பை இங்கு மேற்கொள்கிறது.
ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது
இந்தியாவில் இருந்து செல்போன் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் அதாவது ஏப்ரல் முதல் நவம்பர் 2023 வரை இந்தியாவிலிருந்து மொபைல் போன் ஏற்றுமதி 9 Billion Dollar தாண்டியுள்ளதாக இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) மதிப்பிட்டுள்ளது.
Apple தலைமையிலான மொபைல் போன் ஏற்றுமதி 15 பில்லியன் டொலர்களை கடக்க தயாராக உள்ளது, இது முந்தைய தரவுகளுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் சுமார் ரூ. 50,000 கோடி எனக் கூறப்படுகிறது. விற்பனை 48 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நிகர லாபம் 76 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஐந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில், ஆப்பிள் நிறுவனம் நிகர லாபத்தில் மிக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், இங்கு அசெம்பிள் செய்யப்படும் இந்த iOS போன்கள், தற்போது இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு போட்டியாக மெல்ல மெல்ல முன்னேறி வருகின்றன. 2023 ஆம் ஆண்டில், ஸ்மார்ட்போன் சந்தையில் iPhone 7 சதவீத சந்தைப் பங்கை ஆக்கிரமிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிளின் குறிக்கோள்...
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆண்டுக்கு 50 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த இலக்கை அடைய தொழில்நுட்ப ஜாம்பவானான Apple இலக்கு வைத்துள்ளது.
ஆப்பிள் இந்த இலக்கை அடைந்தால், உலக ஐபோன் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை இந்தியா வகிக்கும். தற்போது, ஐபோன்கள் தயாரிப்பில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Made In India iPhones, Apple iPhone, iPhone 15 Made In India, Apple iPhone Production in India