ஜாய் கிறிஸில்டா குழந்தைக்கு தந்தை நான் தான்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்!
மாநில மகளிர் ஆணைய விசாரணையில் ஜாய் கிறிஸில்டா குழந்தைக்கு நான் தான் தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் என ஜாய் கிரிஸில்டா சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.குறித்த பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.
அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், ஜாய் கிறிஸில்டாவை தான் திருமணம் செய்து கொண்டதை மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, ஜாய் கிறிஸில்டா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில், எனது முன்னாள் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ், என்னைக் காதலித்துத் திருமணம் செய்ததையும், இந்தக் குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார்" என்றுத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.