மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்.., முதன்முதலாக வாக்குறுதி அளித்த மனைவி ஸ்ருதி
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பி, மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தியது.
இதனிடையே, ஜாய் கிரிசில்டாவுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் மாதம்பட்டி ரங்கராஜ் என்று குறிப்பிட்டிருந்தார்.
விசாரணையில் திருமணம் செய்து கொண்டதாகவும், குழந்தை தன்னுடையது தான் என மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டார் என அறிக்கை வெளியிட்ட்டர்.
மேலும், டிஎன்ஏ பரிசோதனையில் அந்த குழந்தை தன்னுடையது தான் என நிரூபித்தால் அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிசில்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி, எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பதே ஜாய் கிறிஸ்சில்டாவின் நோக்கம்.
ஜாய் கிறிஸ்சில்டா தங்களை பிரிக்க நினைக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும், ஜாய் கிறிஸ்சில்டா விவகாரத்தில் எனது கணவருக்கு ஆதரவாக இறுதி வரை நிற்பேன்.
சட்டப்பூர்வ மனைவியான எனது குடும்ப வாழ்க்கையை நாசம் செய்ய ஜாய் கிறிஸ்சில்டா நினைக்கிறார் என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |