குக் வித் கோமாளியில் இருந்து நீக்கப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ்? இதுதான் காரணமா?
தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி விளங்குகிறது.
தற்போது நடைபெறும் ஆறாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
இதில் ராஜு, பிரியா ராமன், ஷபானா, நந்தகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக தேர்வாகி இருக்கிறார்கள்.
இந்நிலையில், முந்தைய சீசன்களின் போட்டியாளர்களான உமா ரியாஸ்கான், கனி, விஜே விஷால், மதுரை முத்து மற்றும் தர்ஷா குப்தா ஆகிய ஐந்து பேர் கலந்துகொண்டுள்ளனர்.
அவர்கள் தற்போதுள்ள போட்டியாளர்களுடன் போட்டி போட்டு சமைக்கும் புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் தாமு மற்றும் செஃப் கௌசிக் ஆகிய இரண்டு நடுவர்கள் தான் இருக்கிறார்கள்.
மூன்றாவது நடுவரான மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை. இதனால் அவர் இந்நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா அவர் மீது புகார் அளித்திருந்தார்.
அதன்பின்னர் எடுக்கப்பட்ட எபிசோடு இது என்பதால் இதில் மாதம்பட்டி ரங்கராஜ் இடம்பெறவில்லை.
அதனால் அவர் பிரச்சனையில் சிக்கியதால் விஜய் டிவி அவரை நீக்கி இருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |