லண்டனில் சம்பாத்தியம்... இன்றோ உலகின் நம்பர் 1 பணக்கார கிராமம்: எங்கிருக்கிறது தெரியுமா?

India Village UnitedKingdom Mahapar RichestVillage
By Kaviarasan Aug 10, 2021 07:12 AM GMT
Report

இந்தியாவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் வெளிநாடுகளில் சென்று சம்பாதித்து பணத்தை சேமித்து வைப்பதன் மூலம், இன்று அந்த கிராமமே உலகின் நம்பர் ஒன் பணக்கார கிராமமாக மாறியுள்ளது.

குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் அருகே மதாபர் என்ற கிராமம் அமைந்துள்ளது. குட்ச் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம் ஆகும்.

அதிலும் வரலாற்று ரீதியாக, பல காலமாக கை வேலைப்பாடுகள், கட்டுமான பணிகள் செய்யும் மக்கள் அதிகம் மாவட்டமாக இது இருக்கிறது. குட்ச் மாவட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் இவர்களை மேஸ்திரிஸ் ஆப் குட்ச் என்று அழைப்பார்கள்.

லண்டனில் சம்பாத்தியம்... இன்றோ உலகின் நம்பர் 1 பணக்கார கிராமம்: எங்கிருக்கிறது தெரியுமா? | Madhapar Is The Richest Village In The World

இந்த மேஸ்திரிஸ் ஆப் குட்ச் இப்போது ஒரு இனமாகவே மாறிவிட்டது. குட்ச் மாவட்டத்தில் இந்த மேஸ்திரி இனத்திற்கு என்று மொத்தம் 18 கிராமங்கள் உள்ளன.

இந்த 18 கிராம மக்கள் முழுக்க கட்டுமான பணியாளர்கள், மேஸ்திரிகள், தொழிலார்கள், சிவில் எஞ்சினியர்கள் அதிகம் காணப்படுகிறார்கள். குஜராத்திலும், அண்டை மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் கட்டுமான பணிகளை முன்னின்று நடத்துவது இந்த 18 கிராமங்களை சேர்ந்தவர்கள் தான்.

அதில் ஒரு கிராமம் தான் இந்த மதாபர் கிராமம். இந்த கிராமம் தான் உலகிலே பணக்கார கிராமமாக பார்க்கப்படுகிறது. வங்கியில் மக்கள் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் இந்த கிராமத்தை பணக்கார கிராமம் என்று வரையறுக்கிறார்கள்.

லண்டனில் சம்பாத்தியம்... இன்றோ உலகின் நம்பர் 1 பணக்கார கிராமம்: எங்கிருக்கிறது தெரியுமா? | Madhapar Is The Richest Village In The World

இந்த கிராமத்தில் மட்டும் மொத்தம் 17 வங்கிகள் உள்ளது. முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் மதாபர் கிராமத்தில் மக்களின் முக்கிய தொழில் கட்டுமான துறை, டைல்ஸ் பதிப்பது போன்ற இன்டிரியர் வேலைகள்தான். இந்த கிராமத்தில், மொத்தம் 7600 குடும்பங்கள் வசிக்கின்றன.

அதில் 447 பேருக்கு ஒரு வங்கி என மொத்தம் 17 வங்கிகள் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த வங்கிகளில் மொத்தம் இந்த கிராம மக்கள் மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாயை சேமித்து வைத்துள்ளனர்.

லண்டனில் சம்பாத்தியம்... இன்றோ உலகின் நம்பர் 1 பணக்கார கிராமம்: எங்கிருக்கிறது தெரியுமா? | Madhapar Is The Richest Village In The World

சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 65 லட்சம் ரூபாய் வரை வங்கியில் சேமித்து வைத்து இருக்கிறார்கள். இந்த தொகை ஒரு சராசரியாகவே பார்க்கப்படுகிறது.

ஒரு சில குடும்பங்களில் சேமிப்பு தொகை குறைவாகவும், ஒரு சில குடும்பங்களில் சேமிப்புத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் உள்ளது. வங்கியில் இருக்கும் சேமிப்பின் அடிப்படையில் இந்த கிராமம் தான் உலகின் நம்பர் ஒன் கிராமம் என்று கூறப்படுகிறது.

இந்த பணத்தை இவர்கள் உள்ளூர் கட்டுமான பணிகள் மூலம் மட்டே சம்பதிக்கவில்லை. இந்த கிராமத்தில் முந்தைய தலைமுறை மக்கள் எல்லோரும் உள்ளூர் கட்டுமான பணிகளை செய்த போதிலும், தற்போதைய தலைமுறை இளைஞர்கள் பலரும் வெளிநாடுகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்கிறார்கள்.

லண்டனில் சம்பாத்தியம்... இன்றோ உலகின் நம்பர் 1 பணக்கார கிராமம்: எங்கிருக்கிறது தெரியுமா? | Madhapar Is The Richest Village In The World

அமெரிக்கா, லண்டன், ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் கட்டுமான பணிகளை இந்த கிராமத்தில் இருப்பவர்கள் மேற்கொள்கிறார்கள். தற்போதைய தலைமுறை இளைஞர்கள் பலர் இந்த கிராமத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இவர்களின் மிகப் பெரிய அனுபவங்கள் வெளிநாடுகளில் இருக்கும் கட்டுமான பணிக்கு தேவைப்படுவதால், இவர்களையே பல நாடுகள் கட்டுமான பணிகளுக்கு அழைக்கின்றனர்.

அப்படி, பல்வேறு கட்டுமான பணிகளில் பணியாற்றி தங்கள் கிராமத்திற்கு பணம் அனுப்புகிறார்கள். வெளிநாடுகளில் நன்றாக சம்பாதித்துவிட்டு, அதை தங்கள் கிராமத்து வங்கியிலேயே சேமித்துவிட்டு சில ஆண்டுகளுக்கு பின் திரும்பி ஊருக்கு வந்து கட்டுமான நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

கிட்டத்தட்ட 7600 வீடுகளில் எல்லா வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு பேர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் டாலர்கள்தான் இவர்கள் வங்கிகளில் லட்சங்களில் பணம் சேர்க்க காரணம். குறிப்பாக பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இந்த கிராம மக்கள் அதிக பணியாற்றுகின்றனர்.

லண்டனில் சம்பாத்தியம்... இன்றோ உலகின் நம்பர் 1 பணக்கார கிராமம்: எங்கிருக்கிறது தெரியுமா? | Madhapar Is The Richest Village In The World

இதனால் லண்டனில் மதாபர் கிராமத்திற்கு என்று தனியாக அசோசியேஷன் இருக்கிறது. அங்கே இருக்கும் மக்கள் எளிதாக ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள இந்த அசோசியேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

கட்டுமான துறை போக விவசாயத்திலும் இந்த கிராமம் நல்ல நிலையில் உள்ளது. தொடர்ந்து மூன்று போக விளைச்சலை மேற்கொண்டு வரும் இந்த கிராமம் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களுக்கு கோதுமை, அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது.

பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், ஏரிகள், பூங்காக்கள், அணைகள், கோவில்கள், மருத்துவமனைகள், ஏன் மாடுகளுக்கு என்று உலகத்தரம் வாய்ந்த பண்ணைகள் கூட அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US