இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த 14 வயது தமிழனின் கண்டுபிடிப்பு
தமிழகத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் கையடக்க CPUயை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாதவ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
கொரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது, ஆன்லைனில் தொடர்ந்து வகுப்புகள் நடந்து வருகிறது.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட 9ம் வகுப்பு மாணவன், கையடக்க CPUயை கண்டுபிடித்துள்ளார்.
இந்த கடினமான பயணத்தை பற்றி மாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஊரங்கினால் அவருக்கு கிடைத்த பொன்னான நேரங்களை துளிக்கூட வீணடிக்காமல் Java, C போன்ற கணனி மொழிகளை கற்றுக்கொண்டேன்.
இதைவைத்து கையடக்க CPUயை கண்டறிந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
அவர் கண்டுபிடித்த கருவி மற்றவர்களுக்கும் உதவியாக இருக்க TERABYTE INDIA CPU MANUFACTURING COMPANY என்ற பெயரில் புதிய நிறுவனத்தை அவரே தொடங்கி உரிய அனுமதியுடன் ஆன்லைன் விற்பனையை தொடங்கியும் உள்ளார்.
மாதவின் அடுத்தக்கட்ட கண்டுபிடிப்பு விண்டோஸ்க்கு நிகராக TB என்ற ஆப்சரேட்டிங் சிஸ்டம் என்பதை நோக்கி படையெடுத்துள்ளது.
இத்தகைய கண்டுபிடிப்பை உருவாக்கிய சிறுவனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மனம் திறந்து பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.