பஞ்சாங்கத்தை பார்த்து தான் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது! நடிகர் மாதவன் பேச்சால் சர்ச்சை
மங்கள்யான் செயற்கைக் கோளை பஞ்சாங்கத்துடன் இணைத்து நடிகர் மாதவன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ'வின் முன்னாள் தலைவர் நம்பி நாராயணன் மீதான பொய் வழக்கை மையமாக வைத்து, ராக்கெட்ரி என்ற தமிழ் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மாதவன் தயாரித்து இயக்கியுள்ள இப்படம், அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இது தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் மாதவன் பேசுகையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் ஞானிகள், வானவியல் சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்து பஞ்சாங்கத்தை கணித்துஉள்ளனர்.
அந்த பஞ்சாங்கத்தின்படி, சுபமுகூர்த்த நேரத்தில் மங்கள்யான் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த செயற்கைக் கோளின் ஆயுள் ஆறு மாதங்கள் என விஞ்ஞானிகள் கணித்த நிலையில், இது ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இதற்கு பஞ்சாங்கப்படி செயற்கை கோளை அனுப்பி, ஒவ்வொரு இயக்கத்தையும் உரிய நேரத்தில் செயல்படுத்தியது தான் காரணம் என பேசினார். இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
Disappointed that @isro has not published this vital information on their website https://t.co/LgCkFEsZNQ
— T M Krishna (@tmkrishna) June 23, 2022
Time to also consider a Mars Panchangam! https://t.co/VsD0xmswR9
'அறிவியல் பற்றி தெரியவில்லை என்றால், மாதவன் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்; பஞ்சாங்கத்தை குறிப்பிடக் கூடாது' என பலர் தெரிவித்துள்ளனர். இதோடு சில பிரபலங்களும் மாதவனை கிண்டலடித்துள்ளனர்.
Such a dissapointment to see the man, who was once a poster boy of Tamil romantic movies turn into a WhatsApp uncle.
— Korah Abraham (@thekorahabraham) June 24, 2022