பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா இலங்கை தமிழ் பெண்? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மாடல் அழகி மதுமிதா வெளியேறப்போவதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் திகதி துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் அன்பு நிறைந்த வீடாக இருந்த பிக்பாஸ் கடந்த சில வாரங்களாக கடும் சண்டை கூடமாக மாறியுள்ளது.
வாய்ப்பேச்சு கை கலப்பு வரை சென்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். அது மட்டும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் பாவணி மற்றும் அக்ஷரா கண்ணீர் சிந்தியே காரியம் சாதித்து வருவதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் கமல் கலந்து கொண்டு பேசும் நாளான இன்று இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் 7 நபர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில் இமான் அண்ணாச்சி, பாவணி, மற்றும் மதுமிதா மூவரும் குறைந்த ஓட்டுகளை பெற்றுள்ளனர்.
இவர்களின் ஜெர்மனியை சேர்ந்த மாடலும் ஆடை வடிவமைப்பாளருமான மதுமிதா தான் இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த வாரம் இமான் அண்ணாச்சி வெளியேறுவார் என நெட்டிசன்கள் கணித்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக இந்த வாரம் மதுமிதா தான் வெளியேறுவார் என கூறப்படுகிறது.