பாகிஸ்தானை 110 ஓட்டங்களில் சுருட்டிய இலங்கை; 5 விக்கெட்களை வீழ்த்திய மதுசங்க
madhushanka 5 wicket hauls pakistan allout for 110 runs; மதுசங்காவின் அபார பந்துவீச்சில், இலங்கை அணி பாகிஸ்தானை 110 ஓட்டங்களில் சுருட்டியது.
110 ஓட்டங்களில் சுருண்ட பாகிஸ்தான்
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடர், பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
லாகூரில் கடாபி மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய பாகிஸ்தான் அணி, மதுசங்காவின் பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல், 25.3 ஓவர்கள் முடிவில் 110 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் தரப்பில், அதிகபட்சமாக பாபர் அசாம் 27 ஓட்டங்கள் குவித்தார்.
5 விக்கெட்களை வீழ்த்திய மதுசங்க
இலங்கை தரப்பில், திசன் மதுசங்கா 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இலங்கை அணிக்கு 111 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அணி 14 ஓவர்களுக்கு 2 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
அவிஷ்கா பெர்னாண்டோ 16 ஓட்டங்களிலும், குசல் மென்டிசு 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் கமிந்து மெண்டிஸ் 52 ஓட்டங்களுடனும், பவன் ரத்நாயக்க 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

கடந்த வாரம் நடைபெற்ற முதல் ODI போட்டியில், இலங்கையை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.