உலகின் முதல் வீராங்கனையை வீழ்த்தி.,முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற மேடிசன் கீஸ்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
அவுஸ்திரேலிய ஓபன்
மெல்போர்ன் பார்க் மைதானத்தில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை எதிர்கொண்டார் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்.
முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கீஸ் கைப்பற்றினார். ஆனால் இரண்டாவது செட்டை அரினா 6-2 என வென்றார்.
எனினும் விடாப்பிடியாக ஆடி நெருக்கடி கொடுத்த கீஸ், மூன்றாவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.
முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம்
இதன்மூலம் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று மேடிசன் கீஸ் (Madison Keys) சாதனை படைத்தார்.
கடந்த வியாழக்கிழமை நடந்த அரையிறுதியில், 2வது இடத்தில் உள்ள வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கை வீழ்த்திய கீஸ், தற்போது உலகின் முதல் இடத்தில் உள்ள சபலென்காவையும் வீழ்த்தியிருக்கிறார்.
தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வென்றுள்ள கீஸ், 2005ஆம் ஆண்டு செரீனாவுக்கு பிறகு முதல் இரண்டு இடங்களில் உள்ள வீராங்கனைகளை வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் பெருமையை பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |