பிரபல பாப் பாடகி மடோனா மருத்துவமனையில் அனுமதி: உடல் நிலை கவலைக்கிடம்
பிரபல பாப் பாடகி மடோனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாப் பாடகி மடோனா
உலகின் நம்பர் ஒன் பிரபல பாப் பாடகியாக வலம் வருபவர் லூயிஸ் சிக்கோனே என்ற மடோனா. இவருக்கு வயது 64.
தன் காந்தக் குரலில் உலகத்தில் உள்ள அனைத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து மைக்கேல் ஜாக்சனுக்கே டஃப் கொடுத்தார்.
இதுவரை மடோனா 7 முறை கிராமி விருதை பெற்றுள்ளார். கடந்த 1990-ம் ஆண்டு வெளியான 'த லைவ் ரெக்கார்ட் ஆஃப் தி டூர்' என்ற இசை ஆல்பமும், கடந்த 1998-ல் வெளியான `தி ரே ஆஃப் லைட்' என்ற இசை தொகுப்பிற்காக இவர் கிராமி விருதை பெற்றார். மேலும், கடந்த 1996-ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான சாதனையாளர் விருதை வென்றார்.
மடோனா மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், மடோனா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, மடோனாவுக்கு ஒரு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல் மேம்பட்டு வருவதாக மடோனாவின் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பூரண குணமடையவேண்டிய பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
She will bounce back cuz that’s what she does best! She is a Survivor! #Madonna ?️??pic.twitter.com/ECqCsKl7f2
— Frozen ?️???? (@Frozen_ROL) June 29, 2023
Let's send #Madonna some love by streaming your favorite Queen of POP songs. ?
— Madonna VULGAR Fan - TheCelebrationTour ?️??? (@NewMadonna1) June 28, 2023
?https://t.co/gV31ANdLPR
https://t.co/uWymXyBDKf https://t.co/QJ2h7pW6qV pic.twitter.com/P8JJuF1YRo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |